Paristamil Navigation Paristamil advert login

கழிவு அகற்றும் நிலையத்தில் தீ.. காற்றில் நச்சுத்தன்மை கலந்ததா..??!!

கழிவு அகற்றும் நிலையத்தில் தீ.. காற்றில் நச்சுத்தன்மை கலந்ததா..??!!

8 சித்திரை 2025 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 1891


பரிஸ் 17 ஆம் வட்டாரத்தில் உள்ள கழிவு அகற்றும் நிலையம் நேற்று பிற்பகல் தீப்பிடித்து எரிந்தது. மருத்துவக்கழிவுகள் உள்ளிட்ட பல கழிவுகளை அழிக்கும் குறித்த நிலையத்தில் ஏற்பட்ட தீயினால் காற்றில் நச்சுத்தன்மை கலந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தீ பரவலினால் பல கிலோ மீற்றர் தூரத்துக்கு பார்வையிடக்கூடியது போல் பெரும் புகைமண்டலம் எழுந்தது. தீயணைப்பு படையினர் உடனடியாக விரைந்து சென்று தீயை அணைக்க போராடினர்.

இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என்றபோதும், காற்றில் நச்சுத்தன்மை பரவினால் பெரும் விளைவுகள் ஏற்படக்கூடும் என நிபுணர்கள் தெரிவித்திருந்தனர். நேற்று இரவு நிலவரப்படி, காற்றில் நச்சுத்தன்மை எதுவும் கலக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. பரிஸ் காவல்துறை தலைமையதிகாரி Laurent Nuñez இதனை தெரிவித்தார்.

எவ்வாறாயினும், நிலமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்