விலை உயரும் அத்தியாவசிய பொருட்கள்?

8 சித்திரை 2025 செவ்வாய் 20:26 | பார்வைகள் : 3792
ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் அமெரிக்க இறக்குமதி வரிகள் அதிகரிப்பிற்கு பதிலளிக்கும் விதமாக ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது. ஆரஞ்சு சாறு, காய்கறிகள், பாதாம் போன்ற பல பொருட்களின் விலை விரைவில் அதிகரிக்க உள்ளது.
ஐரோப்பா ஏப்ரல் 15 முதல் சோளம், அரிசி, காய்கறிகள் மற்றும் பழச்சாறுகளுக்கு வரி விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மே 16 முதல் கோழி, மாட்டிறைச்சி, சோயாபீன்ஸ் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் போன்ற பிற பொருட்களுக்கும் வரி விதிக்கப்படவுள்ளது. சில பொருட்களுக்கு 10% வரியும் மற்றைய பொருட்களுக்கு 25% வரியும் விதிக்கப்பட உள்ளது.