திராட்சையை விழுங்கிய சிறுவன் பலி!!

10 சித்திரை 2025 வியாழன் 13:38 | பார்வைகள் : 1725
திராட்சைப் பழம் ஒன்றை விழுங்கிய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஏப்ரல் 7, திங்கட்கிழமை இந்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது. Suresnes (Hauts-de-Seine) நகரில் வசிக்கும் 2 வயது சிறுவன் ஒருவரே உயிரிழந்துள்ளான். இன்னும் நான்கு நாட்களில் தனது மூன்றாவது வயது பிறந்தநாளை கொண்டாட தயாரான குறித்த சிறுவன், இரவு 9 மணி அளவில் திராட்சைப் பழம் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது, எதிர்பாரா விதமாக முழு பழம் ஒன்றை விழுங்கியுள்ளான். அதை அடுத்து அவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
உடனடியாக மருத்துவக்குழுவினர் அழைக்கப்பட்டு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
இருந்தபோதும் சிறுவனைக் காப்பாற்ற முடியவில்லை. சம்பவத்தின் போது பெற்றோர்கள் இருவரும் வீட்டில் இருந்ததாகவும், அவர்கள் அதிர்ச்சியடைந்து மன அழுத்தத்துக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.