Paristamil Navigation Paristamil advert login

அ.தி.மு.க.,-பா.ஜ., கூட்டணி சேர்ந்து படுகுழியில் விழும் : திருமா

அ.தி.மு.க.,-பா.ஜ., கூட்டணி சேர்ந்து படுகுழியில் விழும் : திருமா

11 சித்திரை 2025 வெள்ளி 07:56 | பார்வைகள் : 293


அ.தி.மு.க., - பா.ஜ.,வோடு தான் கூட்டணி அமைக்கும். இது அனைவரும் அறிந்த உண்மை,'' என வி.சி., தலைவர் திருமாவளவன் கூறினார்.

திருவண்ணாமலையில் அவர் அளித்த பேட்டி: மாதவிடாய் காரணம் காட்டி, பள்ளி மாணவியை தனியே அமர்த்தி தேர்வு எழுத வைத்திருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது. அதற்கு பொறுப்பானவர்கள் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்டசபைத் தேர்தலில் தே.ஜ., கூட்டணி ஆட்சி அமையும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகிறார். முதலில் பா.ஜ., ஒரு கூட்டணியை உருவாக்கட்டும். பா.ஜ., தமிழக தலைவரை மாற்றப் போகின்றனர் என்றதும், யாரை அடுத்து நியமிக்கப் போகின்றனர் என்ற பதற்றம் அக்கட்சித் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. கட்சித் தலைவரை மாற்றுவதாக இருந்தாலே பதற்றப்படும் ஒரு கட்சி தான், 2026ல் தமிழகத்தில்ஆட்சி அமைக்கப் போகிறதா? நகைப்புக்குரியதாக உள்ளது.

தமிழகத்தில் கூட்டணிஉருவமாக இயங்குகிறது என்றால், தி.மு.க., தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மட்டுமே.

அ.தி.மு.க., - பா.ஜ., வோடுதான் கூட்டணி அமைக்கும். பா.ஜ., - அ.தி.மு.க., இல்லாமல்தேர்தலை சந்திக்காது, இது அனைவரும் அறிந்த உண்மை. பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி அமைத்தால், அது, அ.தி.மு.க.,விற்கு எந்த விதத்திலும் பயன் தராது, ஏற்கனவே, ஒரு தேர்தலை சந்தித்து அதில் பாடம் கற்றுள்ளனர். ஆனாலும், அ.தி.மு.க.,வுக்கு வேறு வழியில்லை. சேர்ந்து படு குழியில் விழப் போகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்