சென்னை வந்தார் அமித்ஷா: கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு

11 சித்திரை 2025 வெள்ளி 09:58 | பார்வைகள் : 355
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று (ஏப். 10) இரவு 11.15 மணியளவில் சென்னை வந்தார்.
டில்லியில் இருந்து இன்று இரவு, 10:20 மணியளவில், தனி விமானத்தில் புறப்பட்ட நிலையில் சென்னை வந்த அமித்ஷா, வை வானதி ஸ்ரீநிவாசன், முருகன், அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், துணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.
கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார். நாளை காலை முதல் மாலை வரை, தமிழக பா.ஜ., முக்கிய நிர்வாகிகள் மற்றும் தமிழக பா.ஜ., கூட்டணி கட்சி தலைவர்களுடன், அவர் ஆலோசனை நடத்துகிறார்.
பின், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமியை சந்தித்து, கூட்டணி தொடர்பாக பேசவும், அமித்ஷா திட்டமிட்டுள்ளார். மாலையில், மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டுக்கு செல்கிறார். அரசியல் கட்சி தலைவர்கள் சிலரும் அங்கு வர உள்ளதாக தெரிகிறது. அங்கு ஆலோசனை நடத்துகிறார்.