Paristamil Navigation Paristamil advert login

நிதிஷ் மீண்டும் முதல்வராக முடியாது: பிரஷாந்த் கிஷோர் சாபம்

நிதிஷ் மீண்டும் முதல்வராக முடியாது: பிரஷாந்த் கிஷோர் சாபம்

11 சித்திரை 2025 வெள்ளி 12:01 | பார்வைகள் : 730


பீஹார் முதல்வர் நிதிஷ் குமாரை, மீண்டும் முதல்வராக பா.ஜ., அனுமதிக்காது,'' என, தேர்தல் வியூக நிபுணரும், அரசியல் கட்சி தலைவருமான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

இந்தாண்டு இறுதியில் நடக்கவுள்ள பீஹார் சட்டசபை தேர்தலில், பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் போட்டியிடுகிறது.

இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டி: கட்சி விரும்பினால், பீஹார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவை எதிர்த்து போட்டி யிடுவேன். முதல்வர் நிதிஷ் குமாரின் மோசமான நிர்வாகத்தால், பீஹார் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அவர் தன்னுடைய கடைசி அரசியல் ஆட்டத்தில் உள்ளார். அவர் மீண்டும் முதல்வராக பா.ஜ., அனுமதிக்காது. வரும் தேர்தலில் தே.ஜ., கூட்டணி தோல்வியை தழுவும். அதனால், வரும் ஐந்து மாதங்களுக்கு மட்டுமே அவர் முதல்வராக இருப்பார்.

அரசு நிர்வாகத்தில், நிதிஷ் செயலிழந்து விட்டார். அதிகாரிகளும், நெருங்கிய அரசியல் நண்பர்களும் சேர்ந்துதான் ஆட்சியை நடத்துகின்றனர். மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பதே அவருக்கு தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்