நோர்து-டேம் தேவாலயத்தின் திருத்தப்பணிகளில் பணிபுரிந்தவர்களுக்கு எலிசே மாளிகையில் கெளரவம்!!

11 சித்திரை 2025 வெள்ளி 16:31 | பார்வைகள் : 1892
தீ விபத்துக்குள்ளான நோர்து-டேம் தேவாலயத்தின் திருத்தப்பணிகளில் சிறப்பாக செயற்பட்ட 100 பேருக்கு ஜனாதிபதியின் எலிசே மாளிகையில் கெளரவம் வழங்கப்பட உள்ளது.
ஏப்ரல் 15 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு இந்த கெளரவம் வழங்கப்பட உள்ளது. ஆறு வருடங்களுக்கு முன்னர் நோர்து-டேம் தேவாலயம் தீவிபத்துக்குள்ளானபோது, ஐந்து ஆண்டுகளில் தேவாலயம் திருத்தப்பணிகள் நிறைவடைந்து மீண்டும் பாவனைக்கு கொண்டுவரப்படும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் உறுதியளித்திருந்தார். சொன்னது போலவே ஐந்து ஆண்டுகளில் தேவாலயம் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது.
அதை அடுத்து, இதி பணிபுரிந்த 100 பேருக்கு ”Légion d’honneur கெளரவம் வழங்கப்பட உள்ளது.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி நோர்து-டேம் தேவாலயம் தீப்பிடித்து எரிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.