அமெரிக்க வரி - பிரான்சில் 316 பேருக்கு வேலை இழப்பு!

12 சித்திரை 2025 சனி 08:16 | பார்வைகள் : 1013
பிரான்சில் உள்ள அமெரிக்க நிறுவனம் ஒன்றில் 316 பேருக்கு வேலை பறிபோயுள்ளது.
மதுபான கண்ணாடி போத்தல்களை தயாரிக்கும் Owens-Illinois எனும் நிறுவனத்தில் இந்த வேலை இழப்பு பதிவாகியுள்ளது. பிரான்சில் இரண்டு நகரங்களில் தங்களுடைய தொழிற்சாலையை வைத்திருக்கும் குறித்த நிறுவனம் மொத்தமாக 2,200 ஊழியர்களை கொண்டுள்ளது. அதில் Vergèze (Gard) நகரில் உள்ள தொழிற்சாலையில் இருந்து 164 பேரையும், Vayres (Gironde) நகர தொழிற்சாலையில் இருந்து 81 பேரையும் வேலையை விட்டு நீக்குவதாக அறிவித்துள்ளது.
அதை அடுத்து CGT தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
அண்மையில் அமெரிக்கா கொண்டுவந்த இறக்குமதி வரி அதிகரிப்பை அடுத்து, ஐரோப்பிய நாடுகளுக்கு 20% சதவீத வரியினை அதிகரித்திருந்தது. இதனால் பிரான்சில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வைன் உள்ளிட்ட மதுபானங்கள் விற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதன் எதிரொலியாகவே இந்த வேலை இழப்பு பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.