ஓலிவர் புயல் ! - 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

12 சித்திரை 2025 சனி 19:28 | பார்வைகள் : 731
நாளை ஏப்ரல் 13, சனிக்கிழமை நாட்டின் தெற்கு மற்றும் தென்மேற்கு பிராந்தியங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், ஒலிவர் என பெயரிடப்பட்ட புயல் ஒன்று கரையைக் கடக்கும் எனவும் வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.
ஒலிவர் புயல் ஸ்பெயினில் இருந்து பிரான்சுக்குள் நுழைந்து கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் பிரான்சை விட ஸ்பெயினிலேயே அதிக பாதிப்பை இப்புயல் ஏற்படுத்தும் எனவும், அதேவேளை பிரான்சில் இடி மின்னல் தாக்குதல்களுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது.
Ariège, Corrèze, Dordogne, Gers, Haute-Garonne, Landes, Lot, Lot-et-Garonne, Pyrénées-Atlantiques, Hautes-Pyrénées, Tarn-et-Garonne மற்றும் Haute- Vienne ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாலை 3 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணிவரை இந்த எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.