முற்கூட்டியே ஆரம்பிக்கும் SNCF வேலை நிறுத்தம்!

14 சித்திரை 2025 திங்கள் 12:00 | பார்வைகள் : 1014
தொடருந்துப் பணியாளர்களின் தொழிற்சங்கமான CGT இன்று 14ம் திகதி தங்களின் வேலைநிறுத்தத் திகதியை அறிவித்துள்ளன.
இந்த SNCF தொடருந்துகளின் பணிப்புறக்கணிப்பானது 09ம் திகதி மே மாதம் ஆரம்பிக்கும் என்றே முதலில் தெரிவிக்கப்பட்டது.
இன்றைய அறிவித்தலின் படி முற்கூட்டியே, மே மாதம் 5ம் திகதியிலிருந்து இந்தப் பணிப்புறக்கணிப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் TGV, INOUI, INTERCITÉS போன்றவையும் கடுமையாகப் பாதிக்கக்படும்.
பணிப்புறக்கணிப்பு வாரம், பயணிகளைப் பொறுத்த வரை சிக்கல் மிகுந்த கறுப்பு வாரமாக இருக்கும் என, எதிர்பார்க்ப்படுகின்றது.