Marine le Pen தகுதியிழப்பு உறுதி செய்யப்பட்டால்... ஜோர்டன் பார்டெல்லாவுக்கு வாய்ப்பு!

14 சித்திரை 2025 திங்கள் 22:29 | பார்வைகள் : 1533
முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் RN கட்சித் தலைவர் மரின் லு பெனுக்கு, ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நிதி மோசடி வழக்கில், கடந்த மார்ச் 31-ஆம் தேதி, நான்கு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. இதில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஐந்து ஆண்டுகள் அரசியலுக்கு தகுதியற்றவராக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு நிறைவேற்றப்பட்டால், 2027 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாத நிலைக்கு மரின் லு பென் தள்ளப்படுவார். அவர் தற்போது மேல்முறையீடு செய்திருக்கிறார்.
மேல்முறையீட்டின் தீர்ப்பு 2026 கோடையில் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் தண்டனை உறுதிசெய்யப்பட்டால், ஜோர்டன் பார்டெல்லாவுவை அதிபர் வேட்பாளராக நிறுத்த மரின் லு பென் திட்டமிட்டுள்ளார்.
மரின் லு பென் தலைவர் பதவியிலிருந்து விலகும் நிலையில், பார்டெல்லா கட்சியின் முக்கிய முகமாக இருப்பார் என கூறப்படுகிறது. தேர்தலுக்கு முன்னதாகவே செப்டம்பர் 2026 இல் இம்மாற்றம் நிகழலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், RN கட்சி தற்போதைய கருத்துக்கணிப்புகளில் 31% முதல் 36% வரை ஆதரவை பெற்றுள்ளது. இதனால், பார்டெல்லா போட்டியில் முன்னணியில் இருப்பது உறுதி என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.