பேருந்து பயணங்களை விரும்பாத பரிஸ் மக்கள்!!

15 சித்திரை 2025 செவ்வாய் 09:00 | பார்வைகள் : 901
பரிஸ் மக்களிடம் பேருந்து பயன்பாடு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், பேருந்துகளுக்கு பதிலாக மெற்றோக்கள், ட்ராம் போன்றவற்றை விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.
பரிசில் பேருந்து சராசரியாக மணிக்கு 10 கி.மீ வேகத்திலேயே பயணிக்கின்றன. பேருந்துகளை விட மெற்றோக்களில் விரைவாக செல்ல முடியும் எனவும், நகரம் முழுவதும் மிதிவண்டிகளுக்கான பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளதால், பேருந்துகளை விட வேகமாக மிதிவண்டிகளில் பயணிக்க முடிகிறதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, பேருந்துகள் துப்பரவாக இல்லை எனவும், குறிப்பாக இரவு நேரங்களில் பேருந்துகளில் பயணிப்பது ஆபத்தான ஒன்றாக உள்ளது எனவும் பயணிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, RATP நிறுவன, பரிசில் 37 பேருந்து வழிகளை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.