PS5 : விலை அதிகரிப்பு!

15 சித்திரை 2025 செவ்வாய் 10:00 | பார்வைகள் : 773
விளையாட்டு பிரியர்களுக்கு கவலையான செய்தி ஒன்றை சொனி (sony) நிறுவனம் அறிவித்துள்ளது. டிஜிட்டல் விளையாட்டு சாதனமான PS5 இன் விலையை பல்வேறு நாடுகளில் அதிகரித்துள்ளது. அதில் பிரான்சும் ஒன்றாகும்.
ஏப்ரல் 13, ஞாயிற்றுக்கிழமை PS5 இன் புதிய விலையை சொனி நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, €449.99 யூரோக்களில் இருந்து 50 யூரோக்களால் அதிகரித்து தற்போது €499.99 யூரோக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த விலை அதிகரிப்பு தவிர்க்கமுடியாமல் போனதாக சொனி நிறுவனம் அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளிலும் இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
சொனி நிறுவனம் முன்னதாக 2020 ஆம் ஆண்டிலும் விலையினை அதிகரித்திருந்தது. நான்கு வருடங்களுக்கு முன்னர் PS5 டிஜிட்டர் அறிமுகப்படுத்தும் போது அதன் விலை €399.99 யூரோக்களாக இருந்தது. இந்நிலையில் நான்கு ஆண்டுகளில் 100 யூரோக்களால் விலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.