Paristamil Navigation Paristamil advert login

ராதிகா ஆப்தே விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறாரா ?

ராதிகா ஆப்தே விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறாரா ?

15 சித்திரை 2025 செவ்வாய் 14:33 | பார்வைகள் : 251


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்த நடிகை விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இந்த தகவல் உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி நடிப்பில் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தின் நாயகியாக ’காதல் தேசம்’ படத்தில் நடித்த தபு நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ராதிகா ஆப்தேவிடம் இயக்குனர் பூரி ஜெகன்நாத் ஒரு முக்கிய கேரக்டருக்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

வித்தியாசமான கேரக்டர்களை மட்டுமே தேர்வு செய்யும் ராதிகா ஆப்தே, இந்த படத்தில் தன்னுடைய கேரக்டரை கேட்டதும் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும், விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

நடிகை ராதிகா ஆப்தே ’தோனி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின் ’ஆல் இன் ஆல் அழகு ராஜா’, ’வெற்றிச்செல்வன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தாலும், ’கபாலி’ படத்தில் நடித்த குமுதவல்லி கேரக்டர் தான் அவருக்கு மிகப்பெரிய பெயர் பெற்றுத் தந்தது. அதன் பிறகு ’சித்திரம் பேசுதடி 2’, ’மெர்ரி கிறிஸ்துமஸ்’ போன்ற படங்களில் நடித்த நிலையில் தற்போது மீண்டும் நபர் விஜய் சேதுபதி படத்தின் மூலம் தமிழுக்கு ரீ என்ட்ரி ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்