127 பயணிகளுடன் படகு விபத்து!!

10 வைகாசி 2025 சனி 10:01 | பார்வைகள் : 7726
இன்று அதிகாலை நதி விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
ரொன் (Rhône) நதியில், சப்லோன் (Sablons) நகரப் பகுதிக்கு அண்மையில் இந்த விபத்து நடந்துள்ளது.
இன்று அதிகாலை 1h30 அளவில், 127 பயணிகளுடன் வந்த Bijou du Rhône பயணிகள் நதிக் கப்பல், அங்கு நின்ற ஒரு படகுடன் மோதியுள்ளது.
மிகவும் மோசமாக மோதியதில் கப்பலின் முனைப்பகுதி சேதமானதுடன் பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
மோதப்பட்ட படகு முழுமையாகச் சேதமாகி உள்ளது.
உடனடியாக வந்த அவசரமுதலுதவி மற்றும் மீட்புப் படையினர் காலை வரை சம்பவ இடத்தில் நின்றுள்ளனர்.
127 பயணிகளும், அவர்கள் போகவேண்டிய இடங்களிற்கு பேருந்து ஒழுங்கு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1