கொழும்பில் இரண்டு கட்டிடங்களில் தீ பரவல்

10 வைகாசி 2025 சனி 16:38 | பார்வைகள் : 141
கொழும்பில் வொக்ஷால் வீதியில் அமைந்துள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீயை அணைக்க 06 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில், மின் கசிவுவால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தீப்பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் 2 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.