வேலை நிறுத்தத்தின் இறுதி நாள்.. குறைந்த போக்குவரத்து தடை!!

11 வைகாசி 2025 ஞாயிறு 08:59 | பார்வைகள் : 2267
இன்று மே 11, ஞாயிற்றுக்கிழமையுடன் தொடருந்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வருகிறது. இன்று மிக குறைவான போக்குவரத்து பாதிப்புக்களே ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை முதல் இடம்பெற்று வரும் வேலை நிறுத்தத்தின் இறுதிநாளான இன்று, TER மற்றும் Transilien சேவைகள் தடையின்றி பயணிக்கும் எனவும், TGV சேவைகளில் 96% சதவீதமான சேவைகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
TGV சேவைகளில் பணிபுரியும் 60% சதவீதமான பயணச்சிட்டை பரிசோதகர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக Sud-Rail தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் போக்குவரத்து பாதிப்பு மிக குறைந்த அளவிலேயே பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1