இடி மின்னல் தாக்குதல்.. சாள்-து-கோல் விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிப்பு!!

12 வைகாசி 2025 திங்கள் 08:23 | பார்வைகள் : 635
நேற்று மே 11, ஞாயிற்றுக்கிழமை இரவு பரிஸ் மற்றும் புறநகர்களில் பதிவான இடி மின்னல் தாக்குதல்களுடன் கூடிய மழையினால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன.
குறிப்பாக சாள்-து-கோல் விமான நிலையத்தில் விமான சேவைகள் இயக்குவததில் சிரமம் ஏற்பட்டது. 20 விமானங்கள் வரை வழிமாற்றப்பட்டது. சில விமானங்கள் ஓர்லி விமான நிலையத்துக்கு அனுப்பப்பட்டு தரையிறப்பட்டிருந்தன.
இல்-து-பிரான்சுக்குள் இன்று திங்கட்கிழமை மற்றும் நாளை செவ்வாய்க்கிழமை ஆகிய நாட்களில் இடி மின்னல் தாக்குதல்கள் தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.