இடி மின்னல் தாக்குதல். ஆலங்கட்டி மழை... 39 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

12 வைகாசி 2025 திங்கள் 08:23 | பார்வைகள் : 558
இன்று மே 12, திங்கட்கிழமை நாட்டின் பல பகுதிகளில் இடி மின்னல் தாக்குதல்களும், ஆலங்கட்டி மழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, வடகிழக்கு, கிழக்கு, மேற்கு மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நண்பகலின் பின்னர் அங்கு பலத்த மழை பெய்யும் எனவும், இடி மின்னல் தாக்குதல்களும், சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Ain, Aisne, Allier, Alpes-de-Haute-Provence, Hautes-Alpes, Alpes-Maritimes, Ardèche, Ardennes , Cantal, Corsica-du-Sud, Haute-Corse, Côtes d'Armor, Doubs, Drôme, Finistère, Ille-et-Vilaine, Isère, Loire, Haute-Loire, Loire-Atlantique, Marne, Haute-Marne, Mayenne, Meurthe-et-Moselle, Meuse, Morbihan, Moselle, Nord, Pas-de-Calais, Puy-de-Dôme, Pyrénées-Orientales, Haut-Rhin, Rhône, Haute-Saône, Saône-et-Loire, Somme, Var, Vosges மற்றும் Territoire de Belfort மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இல் து பிரான்சுக்கு விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கைகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளன. பரிஸ் மற்றும் புறநகரங்கள் சிலவற்றில் இலேசான மழைத்தூறலுக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது.