Linky : மின் அளவீடு கருவியை பொருத்த மறுத்தால் மின்சாரக்கட்டணம் அதிகமாகும் அபாயம்!!

12 வைகாசி 2025 திங்கள் 18:36 | பார்வைகள் : 801
பிரெஞ்சு மின்சார வாரியத்தினால் வழங்கப்பட்டிருந்த பழைய மின்சார அளவீடு கருவிகளை மாற்றி, Linky எனும் பச்சை நிற பெட்டிகளை பொருத்தி வருகிறது. உங்கள் வீடுகளில் இவ்வகை கருவிகள் பொருத்தப்படாவிட்டால் மின்சாரக் கட்டணம் அதிகரிப்பதற்குரிய வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Linky பெட்டிகளை 95% சதவீதமான பாவனையாளர்கள் மாற்றிக்கொண்டுள்ளனர். இன்னும் 2 மில்லியன் பேர் அதனை மாற்றவில்லை. அல்லது மாற்றுவதற்கு மறுத்துள்ளனர். அவர்களுக்கு மாதம் 10 தொடக்கம் 15 யூரோக்கள் வரை மேலதிக கட்டணம் அறவிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
Linky பெட்டிகள் தவிர்த்த ஏனைய பெட்டிகளில் இலகுவில் மோசடிகள் செய்ய முடியும் என்பதால் அவை மாற்றப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.