Paristamil Navigation Paristamil advert login

முகமட் அம்ரா : உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி பதாகை!!

முகமட் அம்ரா : உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி பதாகை!!

13 வைகாசி 2025 செவ்வாய் 10:26 | பார்வைகள் : 459


 

போதைப்பொருள் கடத்தல்காரரான முகமட் அம்ரா சென்ற ஆண்டு சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்றிருந்தார். அதன்போது இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இரு காவல்துறையினர் கொல்லப்பட்டிருந்தனர். அச்சம்பவம் இடம்பெற்று நாளை மே 14 ஆம் திகதியுன் ஓராண்டு நிறைவடைகிறது.

கொல்லப்பட்ட இரு காவல்துறையினருக்கும் ஒரு நினைவுப் பலகை திறந்துவைக்கப்பட்டும் என நீதித்துறை அமைச்சர் Gérald Darmanin அறிவித்துள்ளார்.

Eure மாவட்டத்தில் உள்ள Incarville சுங்கச்சாவடியில் வைத்து தாக்குதல் இடம்பெற்று முகமட் அம்ரா தப்பிச் சென்றிருந்தார்.  இரு வாகனங்களில் வந்து வழிமறித்த ஆயுததாரிகள் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டு கொள்ளையர்களை தப்பிச் செல்ல வைத்திருந்தனர்.

சிறைச்சாலை அதிகாரி நாளை இந்த நினைவுப் பலகையை திறந்துவைக்கிறார். கொல்லப்பட்ட காவல்துறையினரின் புகைப்படங்களை தாங்கிய பலகைகளாக அது அமைந்திருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

**

முகமட் அம்ரா தப்பிச் சென்றதன் பின்னர் பெப்ரவரி 22 ஆம் திகதி ரொமேனிய தலைநகர் Bucharest இல் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்