சிகரெட் பெட்டிகளின் விலை மீண்டும் அதிகரிப்பு!!

13 வைகாசி 2025 செவ்வாய் 19:28 | பார்வைகள் : 385
பிரான்சில் சிகரெட் பெட்டிகளின் விலை ஏற்கனவே உச்சத்தை தொட்டுள்ள நிலையில், வரும் ஜூன் 1 ஆம் திகதியில் இருந்து மேலும் விலை அதிகரிக்கப்பட உள்ளன.
Marlboro சிகரெட் பெட்டிகள் (Red, Gold, Fresh, Blue, 100s) 10.45 யூரோக்களில் இருந்து 10.95 யூரோக்களாக அதிகரிக்கப்பட உள்ளது.
Philip Morris சிகரெட் பெட்டிகள் (Kings, Fresh, SSL, 100s) அனைத்தும் 10.95 யூரோக்களாக அதிகரிக்கப்பட உள்ளது.
30 சிகரெட்களைக் கொண்ட Chesterfield Reds பெட்டிகள் 15.60 யூரோக்களில் இருந்து 16.45 யூரோக்களாக அதிகரிக்கப்பட உள்ளன.
30 கிராம் எடைகொண்ட Gauloises நிறுவனத்தின் புகையிலை பெட்டி 50 சதங்களினால் அதிகரிக்கப்பட உள்ளது. அதன் புதிய விலை 18.40 யூரோக்களாகும்.
Royale Evolved Rouge சிகரெட் பெட்டிகள் 12.50 யூரோக்களில் இருந்து 12.70 யூரோக்களாக அதிகரிக்கப்பட உள்ளது.
**
சென்ற மார்ச் மாதம் 1 ஆம் திகதி சிகரெட் பெட்டிகள் விலை அதிகரிப்பைச் சந்தித்திருந்த நிலையில், ஜூன் 1 ஆம் திகதி மீண்டும் விலை அதிகரிக்க உள்ளது. அத்தோடு செப்டம்பர் 1 ஆம் திகதி மீண்டும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புகையிலையினால் பிரான்சில் ஆண்டுக்கு 75,000 மரணங்கள் பதிவாகிறமை குறிப்பிடத்தக்கது.