நகர ரோடீயோக்கள்: தீவிரமாகும் சட்டங்கள்!!

13 வைகாசி 2025 செவ்வாய் 19:52 | பார்வைகள் : 917
தீவிர சம்பவம்:
எவியோன்-லே-பான் பகுதியில், ஒரு நபர் நகர ரோடீயோவை (ஒற்றைச்சில் உந்துருளி ஓட்டம்) தடுக்க முயன்ற தீயணைப்பு வீரர், கடுமையாக சிற்றுந்தால் மோதப்பட்டு படுகாhயத்திற்குள்ளாகி உயிராபத்தான நிலையில் உள்ளார். இது ஒரு கொலை முயற்சியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
நகர ரோடிடீயோக்களைத் தடுக்கசட்டம் என்ன சொல்கிறது?
நகர ரோடியோ குற்றங்களிற்கான தண்டணைகளை மும்மடங்காக உயர்த்தும்படி பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் உள்துறை அமைச்சரிடம் கேட்டுள்ளனர்.
நகர ரோடீயோ: 2018-ல் குற்றமாக அறிவிக்கப்பட்டது.
தண்டனை: 1 வருட சிறை, 15,000 யூரோக்கள் அபராதம், சாரதி அனுமதிப்பத்திரத்தில் 6 புள்ளிகள் பறிக்கப்படும்.
மீண்டும் குற்றம் செய்தால்: 3 வருட சிறை மற்றும் 75,000 யூரோக்கள் அபராதம்.
வாகனம் பறிமுதல், வாகனச் சாரதிப்பத்திரம் ரத்து செய்யப்படலாம்.
வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் நகர ரோடீயோக்களை ஊக்குவித்தல் அல்லது விளம்பரம் செய்தல் தடைசெய்யப்பட்டுள்ளது. இது இரண்டு ஆண்டுகள் சிறையும், 30,000 யூரோக்களும் அபராதமும் பெறக்கூடிய குற்றமாகும்.
இத்தகைய சம்பவங்கள் அதிகரிக்கின்றன
2019-ல் 651 தீர்ப்புகள் → 2023-ல் 1,940 தீர்ப்புகள்.
2022-ல் மட்டும் 18,000 காவற்துறையினர் தலையீடுகள்.
அரசியல் நடவடிக்கைகள்
தண்டனைகளை கடுமையாக்க அரசியல்வாதிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
உள்துறை மற்றும் நீதித்துறை அமைச்சர்களகாவற்றையினரக்கும் மாவட்ட ஆட்சியாளர்களிற்கும் புதிய உத்தரவுகள் வெளியிட உள்ளனர்.
குற்றவாளிகளின் வாகனங்களைப் பறிமுதல் செய்யும் சட்டத்தினை நீதியமைச்சர் ஜெராலட் தர்மனன் அறிவித்துள்ளார்.