Paristamil Navigation Paristamil advert login

ஐரோப்பாவில் பிரெஞ்சு அணு குண்டுகள்? விவாதத்துக்கு தயார்: ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்!

ஐரோப்பாவில் பிரெஞ்சு அணு குண்டுகள்?  விவாதத்துக்கு தயார்: ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்!

13 வைகாசி 2025 செவ்வாய் 22:22 | பார்வைகள் : 544


இன்று இரவு TF1 தொலைக்காட்சியில் அளித்த நேர்காணலின் போது, போலந்து போன்ற மற்ற ஐரோப்பிய நாடுகளில் போர் விமானங்களில் பிரெஞ்சு அணு குண்டுகளை பொருத்தும் சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

தற்போது அமெரிக்கா, பெல்ஜியம், ஜெர்மனி, இத்தாலி, துருக்கி போன்ற நாடுகளில் அணு குண்டுகளை வைத்திருப்பதை அவர் உதாரணமாக சுட்டிக்காட்டியுள்ளார். இதுபோன்ற நடைமுறையை ஐரோப்பிய பாதுகாப்பிற்காக நாமும் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையின் சட்டப்பூர்வமான விளக்கத்தை நான் அடுத்த சில வாரங்களில் வழங்குவேன் எனவும் மேலும் சில முக்கிய நிபந்தனைகள் இருப்பதையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். அதாவது, இந்தத் திட்டத்திற்கு பிரான்ஸ் நிதியுதவி வழங்காது என்றும் பிரான்ஸின் தற்போதைய பாதுகாப்பு திட்டங்களை பாதிக்காது  என்றும் கூறியுள்ளார்.

இத்தகைய புதிய அணு தடுப்பு அணுகுமுறையைப் பற்றி ஏற்கனவே அவர் "மூலதன நிலை விவாதம்" என்ற வார்த்தைகளால் குறிப்பிடத் தொடங்கியுள்ளார். 

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்