மத சின்னங்களை விளையாட்டு போட்டிகளில் அணிவதற்கு எதிரான எமனுவேல் மக்ரோன்!

13 வைகாசி 2025 செவ்வாய் 23:34 | பார்வைகள் : 809
பிரான்ஸ் குடியரசுத் தலைவர் எமனுவேல் மக்ரோன், விளையாட்டு போட்டிகளில் மத சின்னங்களை, குறிப்பாக இஸ்லாமிய மொக்காடு அணிவதை எதிர்த்துள்ளார்.
ஜனபாதிபதி தனது கருத்தில்
«நான் ஒலிம்பிக் ஒப்பந்தக் கோட்பாட்டிற்கு (Charte olympique) ஆதரவாக இருக்கிறேன் – அது போட்டிகளில் அனைத்து மத சின்னங்களையும் தடை செய்கிறது»
பிரதான காரணம்:
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையிலான சமத்துவம். மற்றும் மத வேறுபாடுகள் இல்லாமல் இருப்பதற்காக, எந்த அடையாளங்களையும் அணிவது தடைசெய்யப்பட்டுள்ளது.
ஆனால், போட்டிகள் அல்லாத பொதுவான விளையாட்டு பயிற்சிகளில் மத சின்னங்களை அணிவது தொடர்பான முடிவுகளை விளையாட்டு அமைப்புகளே (Charte olympique) எடுக்க வேண்டும்
விளையாட்டு மையங்களில் பயிற்சிக்காக வருவோர் மத சின்னங்களை அணிவதை சட்டம் தடை செய்யவில்லை – இது நியாயமாகவும் நடைமுறைப்பூர்வமாகவும் இருக்க வேண்டும்.
அத்துடன் அந்த மையங்களின் உள்ளக நடைமுறைகள் இதற்கு ஒத்து வருகின்றதா என்பதைக் கேட்டறிய வேண்டும்.
என எமானுவல் மக்ரோன் மொக்காடு அணிந்தபடி கேள்விகேட்ட வீராங்கனைக்குப் பதிலளித்துள்ளார்.