உக்ரைன் இராணுவத்திற்கு பிரான்ஸ் பயிற்சி - ஜனாதிபதி

14 வைகாசி 2025 புதன் 01:40 | பார்வைகள் : 953
உக்ரன் மீண்டும் தங்களின் பழைய நிலைக்குத் திரும்புமா என்ற கேள்விக்கு,
நேற்று செவ்வாய்கிழமை மே 13ம் தேதி TF1 தொலைக்காட்சியில் செவ்வி வழங்கிய பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவேல் மக்ரோன், «உக்ரைனியர்களுக்கே தங்களது அனைத்து நிலங்களையும் மீண்டும் கைப்பற்ற முடியாது என்பதற்கான பூரண உணர்வு உள்ளது» எனத் தெரிவித்துள்ளார்.
«இது, ஒரு நிலையான அமைதி உண்டாக வேண்டுமானால், பிரச்சனையின் ஒரு பகுதியாக பிராந்திய அடிப்படையிலான சமாதானத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கின்றது»
«போர் நிறைவடைய வேண்டும். அமைதி பேச்சுவார்த்தைக்குள் உக்ரைன் செல்வதற்கு, ஒரு வலுவான நிலை தேவை. அந்த பேச்சுவார்த்தைகள் தான் பிராந்திய பிரச்சனைகளை தீர்க்கும். 2014-இல் ரஸ்யா கைப்பற்றிய பகுதிகளை அனைத்தும் மீண்டும் பெற்றுக்கொள்ளும் திறன் நமக்கு இருக்காது என உக்ரைனியர்களே சொல்கிறார்கள்»
«நாம் உக்ரைனை தற்காப்பு செய்ய உதவ வேண்டும், ஆனால் அதுவே மூன்றாவது உலகப் போரைத் தூண்டுவிடும் என்பதால், விரும்பவில்லை»
«அமைதி ஏற்படும் போது, கட்டாயமாக, கையகப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கும், விடுதலையான பகுதிகளுக்கும் இடையில் ஒரு கோடு இருக்கும். ஒரு வலுவான உக்ரைனிய இராணுவமே அந்த எல்லையின் முழுமையான பாதுகாப்பிற்கு உத்தரவாதம்»
«நாம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உக்ரைன் படையினரிற்கு சிறந்த இராணுவப் பயிற்சிகள் வழங்கியுள்ளளோம்»
என்பதை எமானுவல் மக்ரோன் தனது செவ்வியில் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.