Côte d'Or - கட்டுமானத் தளத்தில் சுவர் இடிந்து மூன்று தொழிலாளர்கள் உயிரிழப்பு!

14 வைகாசி 2025 புதன் 03:40 | பார்வைகள் : 209
45, 56 மற்றும் 58 வயதுடைய மூன்று கட்டிடத் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை, Côte d'Or மாகாணத்தின் Pommard கிராமத்தில் உள்ள ஒரு வேளாண் கட்டடத் திட்டத்தில் வேலை செய்துகொண்டிருக்கும்போது, ஒரு பழமையான கல் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்துள்னர்.
இந்த துயரச்சம்பவம் மே 13, 2025 அன்று காலை நேரத்தில் நடந்ததுள்ளது. சம்பவ இடத்திற்கு டிஜான் நகரத்தின் பொதுநீதியரசர்( procureur de la République) ஒலிவியே காரகொச் (Olivier Caracotch) நேரில் வந்துள்ளார்.
இப்பகுதிக்கு உரிய பழைய கல் சுவர் இடிந்து வீழந்து மூன்று தொழிலாளர்களும் அதில் சிக்கி புதைந்து விட்டனர். அவர்கள் உடலங்களாகவே மீட்கப்பட்டனர்.
இந்த விபத்து தொடர்பாக வேலையிடத்தில் நடந்த தன்னிச்சையான கொலை (homicide involontaire dans le cadre du travail,) என்ற குற்றச்சாட்டின் கீழ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணை Beaune நகர ஜோந்தார்மினக்கும், தொழிலாளர் ஆய்வுத்துறைக்கும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
28 தீயணைப்பு வீரர்கள் மற்றும் SAMU அவசர மருத்துவ குழு சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்
மனநல ஆதரவு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
Beaune துணை ஆளுநர் (sous-préfet) Benoît Byrski நேரில் வந்து ஆய்வு செய்துள்ளார்.
இந்தச் சம்பவம் அயலவர்களை பெரும் அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.