பிரான்சில் அடிமைத்தனத்தை ஒழிக்க பிரோன்சுவா பய்ரூ முனைப்பு?

14 வைகாசி 2025 புதன் 05:00 | பார்வைகள் : 786
ஒரு விவாதத்தின் போது, பிரதமர் பிரான்சுவா பய்ரூ எழுப்பிய ஒரு அறிவிப்பு பெரும் பாராட்டுகளை பெற்றது.
அவர், பிரான்சின் பழைய அடிமைத்தனச் சட்டமான 'கறுப்புச் சட்டம் (Code noir) இனை அதிகாரப்பூர்வமாக நீக்கும் வகையில் சட்டமூலம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில், பாகுபாட்டிற்கு எதிரான போராட்டத்திற்குப் பொறுப்பான அமைச்சர் (ministre en charge de la Lutte contre les discriminations) ஓரோர் பெர்ஜே, குவாதிலூப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆலிவர் சர்வா மற்றும் மேக்ஸ் மத்தியாசின் ஆகியோரை, தன்னுடன் இணைந்து பணியாற்றுமாறு பிரதமர் கோரியுள்ளார்.
Code noirஎன்றால் என்ன?
இது 1685 ஆம் ஆண்டில் அரசர் லூயி XIV ஆணையிட்ட ஒரு ஒழுங்குமுறை (ordonnance)
பிரெஞ்சுக் காலனிகளில் மனிதர்களை அடிமையாக வைத்திருக்க அனுமதித்தது,
மற்றும் அவர்களைத் தங்கள் சொத்துகள் (biens meubles) எனக் கூற அன்றைய சட்டம் வரையறுத்தது?
1848 ஆம் ஆண்டில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டாலும், Code noir முற்றிலும் ரத்து செய்யப்படவில்லை. எந்த ஒரு சட்டமும் இதை நேரடியாகப் பொருத்தமாக ஒழிக்கவில்லை.
Code noir 1848 இல் ரத்து செய்யப்படவில்லை என்றால், இப்போது நாம் அதை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். இது ஜனநாயகக் குடியரசு தன்னைத் தானே நிரூபிக்க வேண்டிய ஒரு வரலாற்றுப் பொறுப்பு.
எனப் பிரதமர் பிரோன்சுவா பய்ரூ மற்றை அமைச்சர்களிற்கும் பாராளுமன்ற உறுப்பினர்களிற்கும் தெரிவித்துள்ளார்.