Porte de la Chapelle : பாரிய தீ.. மூவர் உயிருக்கு போராட்டம்!!

14 வைகாசி 2025 புதன் 06:00 | பார்வைகள் : 642
பரிஸ் 18 ஆம் வட்டாரத்தின் Porte de la Chapelle பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவியதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
மே 13, செவ்வாய்க்கிழமை இரவு 8.40 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 62 Boulevard Ney எனும் முகவரியில் உள்ள கட்டிடம் ஒன்றின் ஐந்தாவது தளத்தில் திடீரென தீ பரவியுள்ளது. தீயணைப்பு படையினர் எச்சரிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்தினை வந்தடையும் முன்னர், தீ மேலும் வேகமாக பரவி விளாசி எரிந்துள்ளது.
வீட்டினுள் சிக்கியிருந்த மூவரை தீயணைப்பு படையினர் வெளியேற்றியிருந்தார்கள். அவர்கள் படுகாயமடைந்து அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
20 தீயணைப்பான் வாகனங்களுடன் 70 வீரர்கள் களத்தில் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.