எட்டு இரவுகளுக்கு மூடப்பட உள்ள A1 மற்றும் A3 நெடுஞ்சாலைகள் !!

14 வைகாசி 2025 புதன் 07:00 | பார்வைகள் : 791
A1 மற்றும் A3 நெடுஞ்சாலைகள் அடுத்துவரும் எட்டு நாட்களுக்கு இரவு நேரங்களில் மூடப்பட உள்ளன. இது தொடர்பான விரிவான தகவல்களை இல்-து-பிரான்சுக்கான போக்குவரத்து சபை நேற்று மே 13, செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.
இரு நெடுஞ்சாலைகளும் இன்று மே 14, புதன்கிழமை முதல் 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையான மூன்று நாட்களும், பின்னர் 19 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையுமான ஐந்து நாட்களும் மூடப்பட உள்ளன. இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 4.30 மணிவரை அவ்விரு நெடுஞ்சாலைகளில் சில பகுதிகள் மூடப்பட உள்ளன.
A1 நெடுஞ்சாலை Aulnay-sous-Bois தொடக்கம் Chennevières-lès-Louvres வரையான பகுதியும்,
A3 நெடுஞ்சாலை Aulnay-sous-Bois தொடக்கம் Paris-Charles-de-Gaulle விமானநிலையம் (Roissy CDG) வரையும் மூடப்பட உள்ளது.
***
”கிரான்பரி” திட்டத்தின் ஒரு அங்கமாக ligne 17 தொடருந்து சேவைகள் விஸ்தரிக்கப்பட உள்ளன. அதன் பணிகளுக்காகவே மேற்படி வீதிகள் மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.