Paristamil Navigation Paristamil advert login

ஒன் நேஷன் ஒன் கிரிட் பின்பற்ற தமிழகம் முடிவு

ஒன் நேஷன் ஒன் கிரிட் பின்பற்ற தமிழகம் முடிவு

14 வைகாசி 2025 புதன் 04:55 | பார்வைகள் : 244


 ஒவ்வொரு மாநிலத்திலும் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் கட்டமைப்பு விதி, தனித்தனியாக உள்ளது. 2005ம் ஆண்டு மாநில மின் கட்டமைப்பு விதியை, தமிழகம் பின்பற்றி வருகிறது.

தற்போது, தென்மாநில மின் தொகுப்பு, தேசிய மின் தொகுப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுதும் ஒரு மாநிலத்தில் இருந்து, எந்த மாநிலத்திற்கும் மின்சாரத்தை, மத்திய மின் வழித்தடத்தில் எடுத்து செல்லலாம். இதற்கு, 'ஒன் நேஷன் ஒன் கிரிட்' என்று பெயர்.

எனவே, மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம், நாடு முழுதும் மின் கட்டமைப்பில் ஒரே விதியை பின்பற்ற, இந்திய மின் கட்டமைப்பு விதிகளை வகுத்துள்ளது.

அனைத்து மாநில மின் வாரியங்களும், இந்திய மின் கட்டமைப்பு விதிகளுக்கு இணங்க, மாநில விதிகளை பின்பற்றுமாறு மத்திய மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது.

அதற்கு ஏற்ப, அந்த விதிகளை தமிழகத்தில் பின்பற்ற, மின் வாரியத்தை ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இதை அமல்படுத்த வரைவு அறிக்கை வெளியிட்டுள்ள ஆணையம், ஜூன் 11ம் தேதிக்குள் கருத்து கூற, மக்களுக்கு அவகாசம் அளித்துள்ளது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்