சீற்ற வானிலை : 47 மாவட்டங்கள் எச்சரிக்கையில்....!!

14 வைகாசி 2025 புதன் 08:00 | பார்வைகள் : 524
மே 14, இன்று புதன்கிழமை நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற வானிலை நிலவும் எனவும், நண்பகல் வரை மிதமான வெப்பமும் அதன் பின்னர் இடி மின்னல் தாக்குதல்களுடன் கூடிய மழையும் பெய்யும் என வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது.
மத்திய, தென்கிழக்கு, தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்கள் என மொத்தமாக 47 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Ain, Alpes-de-Haute-Provence, Hautes-Alpes, Alpes-Maritimes, Ardèche, Ariège, Aveyron, Bouches-du-Rhône, Calvados, Cantal, Corrèze, Haute-Corse, Côtes d'Armor, Creuse, Drôme, Eure-et-Loir, Finistère, Gard, Haute-Garonne, Gers, Ille-et-Vilaine, Isère, Landes, Loire, Haute-Loire, Loire-Atlantique, Lot, Lot-et-Garonne, Lozère, Maine-et-Loire, Manche, Mayenne, Morbihan, Orne, Puy-de-Dôme, Pyrénées-Atlantiques, Hautes-Pyrénées, Pyrénées-Orientales, Sarthe, Savoie, Haute-Savoie, Tarn, Tarn-et-Garonne, Var, Vaucluse, Vendée மற்றும் Haute-Vienne ஆகிய மாவட்டங்களுக்கு “மஞ்சள்” நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை தலைநகர் பரிஸ் மற்றும் புறநகரங்களில் 17 தொடக்கம் 23℃ வரையான மிதமான வெப்பம் நிலவும் எனவும் ஓரிரு இடங்களில் மழைத்தூறல் பதிவாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.