வெளிநாட்டு சிறைகளை வாடகைக்கு எடுத்தல்.. ஜனாதிபதியின் புதிய திட்டம்!!

14 வைகாசி 2025 புதன் 09:00 | பார்வைகள் : 650
பிரெஞ்சு சிறைச்சாலைகள் கைதிகளால் நிரம்பி வழிகிறமை அனைவரும் அறிந்ததே. 62,000 பேர் அடைக்கக்கூடிய சிறையில் 81,000 பேருக்கும் அதிகமானோர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று TF1 தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றி கேள்விகளுக்கு பதிலளித்த ஜனாதிபதி மக்ரோன், இந்த ‘நிரம்பி வழியும் கைதிகள்’ தொடர்பில் சில முக்கிய தகவல்களை வெளியிட்டார்.
“பற்றாக்குறையை தீர்க்க வெளிநாடுகளில் உள்ள சிறைச்சாலைகளை வாடகைக்கு எடுப்பது” ஒரு தீர்வாக இருக்கும் என ஜனாதிபதி குறிப்பிட்டார். அத்தோடு நீதித்துறை அமைச்சர் Gérald Darmanin முன்மொழிந்த “சிறைச்சாலை செலவீனங்களில் ஒரு பகுதியை கைதிகளே செலுத்த வேண்டும்” எனும் கோரிக்கை “முற்றிலும் பொருத்தமானது” எனவும் தெரிவித்தார்.
தற்போது 5,000 கைதிகளுக்கான சிறைச்சாலை கட்டப்பட்டு வருகிறது. அதில் சில மாற்றங்களை ஏற்படுத்தி, விரைவாக அதனை கட்டி முடிப்பதற்காக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.