
14 வைகாசி 2025 புதன் 11:41 | பார்வைகள் : 1176
சமூகத் திட்டங்கள் மற்றும் ஓய்வூதியத் திட்ட சீர்திருத்தம் - மாநகரக் காவற்துறை!
பிரான்சில் தற்போது நடைமுறையில் உள்ள 400 பணிநீக்கத் திட்டங்களைப் பற்றி, குறிப்பாக ArcelorMittal நிறுவனத்தின் திட்டம் தொடர்பாக, CGT பொது செயலாளர் சோபி பினே (Sophie Binet) எமானுவல் மக்ரோனிடம் வெளிப்படையாகக் கேட்டார்.
இதற்கப் பதிலளித்த மக்ரோன்
இந்த நிறுவனத்தை தேசியமயமாக்க மாட்டேன், ஏனெனில் அது பல்லாயிரம் கோடி யூரோக்களைச் செலவழிக்க வேண்டியதாகும் மற்றும் அதற்கு அர்த்தமில்லை. ஆனால், டன்கெர்க் மற்றும் ஃபோஸ் (Dunkerque> Fos) ஆகிய தொழிற்சாலைகளை 'மீட்பேன்'
என வாக்குறுதியளித்தார்.
தீர்வு தேசியமயமாக்கல் அல்ல, ஆனால் வளர்ச்சிக்கான உறுதிகள் வேண்டும். எஃகு (யஉநைச) சந்தையைப் பாதுகாக்க 'பாதுகாப்பு விதிமுறைகள்' நடைடுறைப்படுத்தப்படல் வேண்டும். இது பிரான்ஸ் அரசின் அழுத்தத்தில், ஐரோப்பிய ஆணையத்தால் பிப்ரவரியில் ஏற்கப்பட்ட முடிவாகும்,
என்று அவர் கூறினார்.
ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக
ஓய்வூதிய விவகாரத்தில், எந்தவொரு ஜனநாயக வாக்கெடுப்புக்கும் இடமில்லை என கூறி, அந்தச் சீர்திருத்தம் 'பிரான்ஸ் அரசின் நிதியைக் காப்பாற்றும் நோக்கத்தில்' எடுக்கப்பட்டது
என மக்ரோன் வலியுறுத்தினார்.
ஆனால், 'நமது சமூக மாதிரியின் நிதி ஆதாரத்தைப் பற்றிய சமூகக் கருத்தாய்வை' ஆரம்பிக்க விரும்புவதாகவும், 'வேலைத் தரம் மற்றும் வேலை வடிவங்களின் பரிணாமம்' குறித்த சமூக ஒன்றுபட்ட ஆலோசனையை ஆரம்பிக்க விருப்பும் தெரிவித்தார் மக்ரோன்.
நகராட்சி காவல் அதிகாரம்
நகராட்சி காவல்துறையின் அதிகாரங்களை, சில நடவடிக்கைகளில் (பறிமுதல், குற்றச்செயலின் நேரடி தடை, நிச்சயமான அபராதம்) விரிவுபடுத்துவதற்கு சட்டம் இயற்ற வேண்டும் எனவும், அவை சட்டவியலாளர் கட்டுப்பாட்டில் நடைபெற வேண்டும் எனவும் மக்ரோன்தெரிவித்தார்.