"மக்ரோன் பயங்கரவாதம் பக்கம் நிற்கிறார்" - இஸ்ரேலிய பிரதமர் குற்றச்சாட்டு!!

14 வைகாசி 2025 புதன் 16:17 | பார்வைகள் : 446
"ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் பயங்கரவாதிகள் பக்கம் நிற்கிறார்" என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுகடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
"மக்ரோன் மீண்டும் ஒரு கொலைகார இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பின் பக்கம் சாய்ந்து, அதன் மோசமான பிரச்சாரத்தை பரப்பி, இஸ்ரேல் மீது சடங்கு குற்றங்களைச் செய்து வருகிறார்" என பெஞ்சமின் நெத்தன்யாஹூ குற்றம் சாட்டியுள்ளார்.
ஜனாதிபதி மக்ரோன் நேற்று மே 13, செவ்வாய்க்கிழமை இரவு TF1 தொலைக்காட்சியில் நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். அதன் போது, "இன்று காஸா மக்களுக்கு இஸ்ரேல் செய்துவருவது ஏற்றுக்கொள்ள முடியாதது. வெட்கக்கேடான செயல்" என தெரிவித்திருந்தார். அதை அடுத்தே நெத்தன்யாஹூ இதனை தெரிவித்தார்.