எங்களிற்கு நீங்கள் பாடம் எடுக்கத் தேவையில்லை - இஸ்ரேல்

14 வைகாசி 2025 புதன் 17:03 | பார்வைகள் : 1084
இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரயேல் கட்ஸ் (Israël Katz) «எமானுவேல் மக்ரோனுக்கு எங்களுக்கு அறிவுரையோ, நெறியோ கற்பிப்பதற்கான உரிமை இல்லை» என புதன்கிழமை தெரிவித்துள்ளார். இது, காசா பகுதியில் இஸ்ரேல் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் முன்வைத்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் கூறப்பட்டுள்ளது.
«பிரான்ஸில் யூதர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியாத காலத்தில் அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதைக் குறித்து நாம் தெளிவாக நினைவில் வைத்துள்ளோம். அதனால், ஜனாதிபதி மக்ரோனின் நெறி போதனை எங்களுக்கு தேவையில்லை» என அவர் தனது அமைச்சகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறினார்.
மேலும், «இஸ்ரேல் ராணுவம் கடுமையான மற்றும் சிக்கலான சூழ்நிலைகளிலும் நேர்மையான முறையில் செயல்படுகிறது. இது கடந்த காலங்களில் பிரான்ஸ் தனது போர்களில் மேற்கொண்டதைவிட, இஸ்ரேல் உயர்ந்த நெறிமுறைகளை பின்பற்றுகிறது» என்றும் அவர் கூறினார்.
இதேநேரத்தில், இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசா பகுதியில் தானது அரசாங்கம் மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் குறித்து மக்ரோன் விமர்சித்ததையடுத்து, அவரை ஒரு 'இஸ்லாமிய தீவிரவாத அமைப்பின் பக்கம்' சாய்ந்துள்ளதாகக் குற்றம் சாட்டியமையும் குறிப்பிடத்தக்கது!