Paristamil Navigation Paristamil advert login

ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்; தொடர்ந்து வேட்டையாடும் ராணுவம்

ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்; தொடர்ந்து வேட்டையாடும் ராணுவம்

15 வைகாசி 2025 வியாழன் 09:15 | பார்வைகள் : 618


ஜம்மு காஷ்மீரின் புல்மாவாவில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில், 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இன்று அவந்திப்போரா பகுதியில் என்கவுன்டர் நடக்கிறது.

புல்வாமா மாவட்டத்திற்குட்பட்ட நதிர் கிராமத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நேற்று துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டுள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவனை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

இந்நிலையில், 2வது நாளாக நீடித்து வரும் இந்த மோதலின் போது, மேலும் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம், ஜம்மு காஷ்மீரில் கடந்த 48 மணிநேரத்தில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

அதேபோல, இன்று அவந்திபோரா பகுதியில் உள்ள டிரால் பகுதிகளிலும் பயங்கரவாதிகளுக்கு எதிரான என்கவுன்டர் தொடங்கியுள்ளது. இது குறித்து காஷ்மீர் போலீசார் வெளியிட்ட பதிவில், 'நடேர், டிரால் பகுதிகளில் என்கவுன்டர் தொடங்கி விட்டது.

போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினர் தங்களின் வேலையை தொடங்கி விட்டனர்,' எனக் குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த இரு தினங்களுக்கு முன்பு, கேல்லர் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தீவிர சோதனையில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் வேட்டையாடப்பட்டனர்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியை பாதுகாப்பு பணியினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்