அட்டையில் அச்சடிக்கப்பட்ட மெற்றோ பயணச்சிட்டை! - 53 வருடங்களின் பின்னர் முடிவுக்கு வருகிறது!!

16 வைகாசி 2025 வெள்ளி 21:36 | பார்வைகள் : 4918
அட்டையில் அச்சடிக்கப்பட்ட சிறிய மெற்றோ பயணச்சிட்டைகளின் விற்பனையை நிறுத்துவதற்கு இல்-து-பிரான்ஸ் பொது போக்குவரத்து சபை (Île-de-France Mobilités) முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. 2026 ஆம் ஆண்டு கோடை காலத்துடன் முற்றாக விற்பனை நிறுத்தப்படும் எனவும், அதன் பின்னர் அவை செல்லுபடியற்றதாக மாறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மெற்றோ பயணச்சிட்டைகள் தொலைபேசிகளுக்குள் சுருங்கிவிட்டதால், இந்த பாரம்பரிய பயணச் சிட்டைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. 1973 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பயணச்சிட்டை முறை கிட்டதட்ட 53 வருடங்களின் பின்னர் முடிவுக்கு வர உள்ளது.
இதுவரை 400 நிலையங்களில் இவ்வகை பயணச்சிட்டைகளின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், வரும் செப்டம்பருடன் மொத்தமாக விற்பனை நிறுத்தப்படும் எனவும், பயணச்சிடைகள் கைவசம் வைத்திருப்போர் அதனை 2026 ஆம் ஆண்டு கோடை காலத்துக்குள் பயன்படுத்தும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1