Paristamil Navigation Paristamil advert login

மெட்ரோவில் இரண்டு பெண்களை கழுத்தை நெரித்து கொல்ல முயன்றவர் கைது!

மெட்ரோவில் இரண்டு பெண்களை கழுத்தை நெரித்து கொல்ல முயன்றவர் கைது!

17 வைகாசி 2025 சனி 23:24 | பார்வைகள் : 783


சனிக்கிழமை காலை, 8.30 மணியளவில்  மெட்ரோ 11ஐ சேர்ந்த  Pyrénées நிலையத்தில் ஒரு மணி நேர இடைவெளியில் இரண்டு பெண்கள் ஒரே நபரால் கழுத்தை இறுக்கி தாக்கப்பட்டுள்ளனர். 

முதல் பெண் நகரும் படிக்கட்டில் இருந்தபோது தாக்கப்பட்டுள்ளார். அருகில் இருந்த பயணிகள் தலையிட்டு குற்றவாளியை விரட்டியுள்ளனர். ஆனால் அவர் மீண்டும் திரும்பி வந்து இன்னொரு பெண்ணை தாக்க முயன்ற போது RATP பாதுகாப்பு ஊழியர்களால் காப்பாற்றபட்டாள்.

தாக்கிய நபர் McDonald’s அருகே பிடிபட்டுள்ளார். அவரை GPSR பாதுகாப்பு குழு கைது செய்துள்ளது. தாக்கப்பட்ட பெண்கள் மருத்துவ குழுவினர் உதவியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களில் ஒருவர் கர்ப்பிணி என சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து RATP கவலை தெரிவித்துள்ளது. குற்றவாளியின் மனநிலை தொடர்பான மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது.

இதுபோன்ற தாக்குதல் ஒரு வாரத்துக்கு முன்பும் Châtelet நிலையத்தில் நிகழ்ந்துள்ளது. இரு பெண் RATP ஊழியர்கள் தாக்கப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவரும் கர்ப்பமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்