Paristamil Navigation Paristamil advert login

Eurovision 2025 : ஏழாம் இடத்தில் பிரான்ஸ்.. - குவியும் ஆதரவு!!

Eurovision 2025 : ஏழாம் இடத்தில் பிரான்ஸ்.. - குவியும் ஆதரவு!!

18 வைகாசி 2025 ஞாயிறு 05:41 | பார்வைகள் : 858


நேற்று மே 17, சனிக்கிழமை இடம்பெற்ற Eurovision 2025 போட்டியில் பிரான்ஸ் சார்பாக பங்கேற்ற Louane, ஏழாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். 25 நாடுகளைச் சேர்ந்த பாடகர், பாடகிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர்.  

அவர் ஏழாவது இடத்தைப் பெற்றுக்கொண்டதன் பின்னரும் அவருக்கான ஆதரவு இணையத்தில் பரவி வருகிறது. "அவர் தனது முழு திறமையும் வெளிப்படுத்தினார்.  நாங்கள் எவ்விதத்திலும் Louane இனை குற்றம் சாட்டவில்லை!" என பலர் கருத்திட்டு வருகின்றனர்.

Louane இற்கு பொதுமக்கள் சார்பாக 50 புள்ளிகள் மட்டுமே கிடைத்தது. மொத்தமாக அவர் 230 புள்ளிகளை பெற்றுக்கொண்டார். அதை அடுத்தே அவர் ஏழாவது இடத்தினை பெற்றுக்கொண்டார்.

சென்ற வருடம் இடம்பெற்ற போட்டியில்
பிரெஞ்சுப் பாடகர் Slimane Nebchi, நான்காவது இடத்தினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்