Paristamil Navigation Paristamil advert login

நந்திக்கடலில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக அஞ்சலி

நந்திக்கடலில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக அஞ்சலி

18 வைகாசி 2025 ஞாயிறு 08:03 | பார்வைகள் : 209


முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவு நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

எங்கள் பெருமை மிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலயத்தில் உயிரிழந்தவர்களின்  ஆத்மசாந்திவேண்டி பிரார்த்தனையும் மேற்கொள்ளப்பட்டது. 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்