Républicains கட்சித்தலைவர் ஆகிறார் Bruno Retailleau!!

18 வைகாசி 2025 ஞாயிறு 20:30 | பார்வைகள் : 3346
Républicains கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்குரிய வாக்கெடுப்பு இடம்பெற்று, அதில் 74.31% சதவீத வாக்குகளைப் பெற்று அக்கட்சியின் தலைவர் ஆகிறார் தற்போதைய உள்துறை அமைச்சர் Bruno Retailleau.
மே 18, இன்று ஞாயிற்றுக்கிழமை அவர்களது கட்சி அலுவலகத்தில் இந்த வாக்கெடுப்பு இடம்பெற்றது. கட்சிக்குள் பெரிதும் செல்வாக்குள்ள நபராக அவர் மாறியுள்ளார். அதை அடுத்து, அக்கட்சி சார்பாக ஜனாதிபதி வேட்பாளராகவும் அவர் களம் காண உள்ளார்.
இதுவரை அக்கட்சியின் தலைவராக இருந்து, 2027 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட Laurent Wauquiez, பெரிதளவில் கவனத்தை ஈர்க்கவில்லை.
வலதுசாரி கட்சியான Républicains யில் அவர் கடந்த 2012 ஆம் ஆண்டு இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1