பரிஸ்-ஓர்லி விமான நிலையம்: 15 சதவீத விமானங்கள் ரத்தும் தாமதங்களும்!

19 வைகாசி 2025 திங்கள் 14:02 | பார்வைகள் : 268
பரிஸின் தெற்கு பகுதியில் உள்ள ஒர்லி விமான நிலையத்திலிருந்து (l’aéroport d’Orly) புறப்படவிருந்த பல விமானங்கள், ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கோளாறையடுத்து, 40 சதவீத விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டன. மேலும் சில விமானங்கள் தாமதமாக புறப்படுகின்றன.
- பரிஸ்–கான்ஸ்டாண்டின் (Constantine) விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- பரிஸ்–மைகோனோஸ் (Mykonos) விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- எரேவான் (ஆர்மீனியா) நோக்கி செல்லும் விமானம் தற்போது 25 நிமிட தாமதமாக புறப்படும்.
- மராக்கெஷ் (Marrakech) நோக்கி புறப்படும் ஏழு விமானங்களில் இரண்டு விமானங்கள் 35 நிமிடங்கள் முதல் 1 மணி 10 நிமிடங்கள் வரை தாமதம் ஏற்படும்.
ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கோளாறு காரணமாக, நூற்றுக்கணக்கான பயணிகள் இந்த திங்கட்கிழமையும், பாதிக்கப்படக்கூடும்.
ஞாயிற்றுக்கிழமை மாலை வரை கோளாறு சரிசெய்யப்படாததால், DGAC இன்றும் விமான நிறுவனங்களுக்கு தங்களது விமானங்களில் 15% ஐ ரத்து செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. அதில் சில விமானங்கள், வேறு விமான நிலையங்களுக்கு மாற்றி வழி நடத்தப்பட்டுள்ளன.