இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரை 46 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவு!

19 வைகாசி 2025 திங்கள் 15:29 | பார்வைகள் : 132
இலங்கையில் 2025ஆம் ஆண்டின் இதுவரை 46 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் 31 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களின் தூண்டுதலால் இடம்பெற்றவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களின் தூண்டுதலால் நடந்த 31 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பில் 100க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட 41 துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 27 பிஸ்டல் வகை துப்பாக்கிகள் எனவும், ஏனையவை 14 ம், டி-56 ரக துப்பாக்கிகள் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.