Paristamil Navigation Paristamil advert login

சூர்யா 46' படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் ?

சூர்யா 46' படத்தில்  இணைந்த  ஜிவி பிரகாஷ் ?

19 வைகாசி 2025 திங்கள் 15:22 | பார்வைகள் : 136


சூர்யா 46' படத்தின் பூஜை இன்று நடைபெற்ற நிலையில், இந்த படத்திற்கு இசையமைக்கும், இசையமைப்பாளர் குறித்த தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே, இந்த இசையமைப்பாளரும் சூர்யாவும் இணைந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்த நிலையில், இப்போது மீண்டும் அந்த கூட்டணி இணைந்துள்ளதால், இன்னொரு தேசிய விருது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 46வது படத்தின் பூஜை இன்று நடைபெற்றது இந்த படத்தில் நாயகியாக மமிதா பாஜூ நடிக்க இருப்பதாகவும், முக்கிய வேடங்களில் ரவீனா டண்டன் மற்றும் ராதிகா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகும் என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜிவி பிரகாஷ் குமார், தான் 'சூர்யா 46' படத்திற்கு இசையமைக்க இருப்பது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். அதோடு, ஃபயர் எமோஜியையும் பகிர்ந்துள்ளார்.

இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சூர்யா மற்றும் ஜிவி பிரகாஷ் இணைந்து பணியாற்றிய 'சூரரை போற்று' திரைப்படத்திற்கு, சிறந்த இசையமைப்பாளருக்கான விருது உட்பட ஐந்து தேசிய விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.இப்போது, மீண்டும் அதே கூட்டணி இணைந்துள்ளதால், இன்னொரு தேசிய விருது கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்