விஷால் காதலி இந்த நடிகையா?

19 வைகாசி 2025 திங்கள் 16:22 | பார்வைகள் : 149
நடிகர் விஷால் சமீபத்தில் அளித்த பேட்டியில், விரைவில் நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்பட இருப்பதாகவும், அதனை அடுத்து தனது திருமணமும் நடைபெற இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஏற்கனவே பெண் பார்த்தாகிவிட்டது என்றும், இது ஒரு காதல் திருமணம் என்றும் அவர் கூறிய நிலையில், அவர் திருமணம் செய்யப் போவது நடிகை சாய் தன்ஷிகா என்று கூறப்பட்டு வருகிறது.
ரஜினிகாந்த் நடித்த 'கபாலி’ உட்பட பல திரைப்படங்களில் நடித்த சாய் தன்ஷிகா, ’யோகிடா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் விழா சென்னையில் இன்று மாலை நடைபெற உள்ள நிலையில், அதில் சிறப்பு விருந்தினராக விஷால் கலந்து கொள்ள உள்ளார்.
இந்த விழாவில், விஷால் தனக்கும் சாய் தன்ஷிகாவுக்கும் திருமணம் நடைபெறுவது குறித்து அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில வருடங்களாகவே விஷால், சாய் தன்ஷிகா காதலித்து வருவதாகவும், முதலில் இருவரது உறவு நட்பாக தொடங்கி அதன் பின்னர் காதலாக மாறிவிட்டதாகவும், நடிகர் சங்க கட்டிடம் திறந்தவுடன் அதே மாதத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என்றும் திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.