விஜய்யின் 'ஜனநாயகன்' தெலுங்கு படத்தின் ரீமேக்கா?

19 வைகாசி 2025 திங்கள் 16:22 | பார்வைகள் : 140
தளபதி விஜய் நடித்து வரும் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ படம், தெலுங்கு படம் ஒன்றின் ரீமேக் என்று ஏற்கனவே செய்திகள் கசிய்ந்த நிலையில், தற்போது அது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜனநாயகம்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்த படம் பிரபல தெலுங்கு நடிகர் பாலையா நடித்த ‘பகவத் கேசரி’ என்ற படத்தின் ரீமேக் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது ‘ஜனநாயகம்’ படத்தின் தயாரிப்பு நிறுவனம், அந்த படத்தின் ரீமேக் உரிமையை 4.5 கோடி ரூபாய் கொடுத்து பெற்றதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, ‘ஜனநாயகம்’ படம் ‘பகவத் கேசரி’யின் ரீமேக் தான் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான ‘பகவத் கேசரி’ திரைப்படத்தை அனில் ரவிபுடி இயக்கியிருந்தார். அந்த படம் சுமார் 130 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில், பாலையா முன்னாள் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்த நிலையில், தற்போது விஜய்யும் அதே வேடத்தில் நடித்துவருகிறார் என்பது படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் வில்லனாக பாபி தியோல் நடித்திருக்கும் நிலையில் மமிதா பாஜு, பிரியாமணி, கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், ஸ்டண்ட் இயக்குனராக அனல் அரசு, கலை இயக்குனராக செல்வகுமார், படத் தொகுப்பாளராக பிரதீப் ராகவ், உடை வடிவமைப்பாளராக பல்லவி, பப்ளிசிட்டி டிசைனராக கோபி பிரசன்னா ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.