62 புலம்பெயர்வோருடன் ஆங்கிலக்கால்வாயில் மூழ்கிய படகு

19 வைகாசி 2025 திங்கள் 18:37 | பார்வைகள் : 189
ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற புலம்பெயர்வோர் 62 பேர் பயணித்த படகொன்று தண்ணீரில் மூழ்கியது.
துரதிர்ஷ்டவசமாக ஒருவர் உயிரிழக்க, அதிர்ஷ்டவசமாக மற்ற அனைவரும் உயிருடன் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
நேற்று இரவு, ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற புலம்பெயர்வோர் 62 பேர் பயணித்த படகொன்று தண்ணீரில் மூழ்கியுள்ளது.
உடனடியாக, பிரான்ஸ் அதிகாரிகளும் பிரித்தானிய அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையில், தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த ஒரு தாய் மற்றும் குழந்தை உட்பட, 61 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்கள்.
அப்போது, பிரெஞ்சு கடற்படை ஹெலிகொப்டர் ஒன்று தண்ணீரில் ஒருவர் அசைவற்ற நிலையில் கிடப்பதைக் கண்டு அவரை மீட்க முயல, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டிருந்தது தெரியவந்தது.
மீட்கப்பட்டவர்கள் பிரான்சுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், குளிரால் ஏற்படும் ஹைப்போதெர்மியா முதலான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.