இன்றும் தொடரும் சீரற்ற வானிலை.. 37 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

20 வைகாசி 2025 செவ்வாய் 08:00 | பார்வைகள் : 535
இடி மின்னல் தாக்குதல்கள், ஆலங்கட்டி மழை என இன்றும் சீரற்ற வானிலை தொடர்கிறது. மே 20, செவ்வாய்க்கிழமை இன்று 37 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முந்தைய நாட்களைப் போல நண்பகலின் பின்னர் ஆரம்பமாகும் இடி மின்னல் தாக்குதல்கள், மற்றும் ஆலங்கட்டி மழையினால் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட உள்ளன. Ain, Allier, Alpes-de-Haute-Provence, Hautes-Alpes, Alpes-Maritimes, Ardèche, Aveyron, Bouches-du-Rhône, Cantal, Corrèze, Corse-du-Sud, Haute-Corse, Côte-d'Or, Creuse, Doubs, Drôme, Gard, Isère, Jura, Loire, Haute-Loire, Lot, Lozère, Haute-Marne, Nièvre, Puy-de-Dôme, Haut-Rhin, Rhône, Haute-Saône, Saône-et-Loire, Savoie, Haute-Savoie, Vaucluse, Vosges, Yonne மற்றும் Territoire de Belfort ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு Var மாவட்டத்துக்கு அதிகூடிய எச்சரிக்கையான ‘செம்மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு 9 மணிவரை இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் Météo-France அறிவித்துள்ளது.