Paristamil Navigation Paristamil advert login

Var மாவட்டத்தை சூறையாடும் புயல்.. ஒருவர் பலி... இருவரைக் காணவில்லை!!

Var மாவட்டத்தை சூறையாடும் புயல்.. ஒருவர் பலி... இருவரைக் காணவில்லை!!

20 வைகாசி 2025 செவ்வாய் 13:31 | பார்வைகள் : 315


புயல் காரணமாக Var மாவட்டத்துக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அங்கு நேற்று இரவில் இருந்து மணிக்கு 110 கி.மீ வேகத்துக்கு அதிகமான புயல் காற்று வீசி வருகிறது.

குறித்த மாவட்டத்தில் உள்ள Lavandou, Vidauban, Le Luc, La Garde-Freinet, Grimaud, Collobrières, La Môle, Cavalaire மற்றும் Bormes-les-Mimosas போன்ற நகரங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது, வீடுகளுக்குள்ளும் வெள்ளம் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக Cavalière  நகரில் ஒருமணிநேரத்தில் 250 மி.மீ மழை கொட்டித்தீர்த்துள்ளது. மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளது.

அத்தோடு இன்று காலை கிடத்த தகவல்களின் படி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், இருவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 200 தீயணைப்பு படையினர் களத்தில் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மகிழுந்துகளை மழை வெள்ளம் அடித்துச் செல்லும் காட்சிகளை அங்கு வசிக்கும் மக்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்